செய்திகள்
பாதுகாப்பு பணியில் வீரர்கள்

பைடன் பதவியேற்பு விழா பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 200 வீரர்களுக்கு கொரோனா தொற்று

Published On 2021-01-23 03:07 GMT   |   Update On 2021-01-23 03:07 GMT
அமெரிக்காவில் அதிபர் பதவியேற்பு விழாவிற்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வீரர்களில் சுமார் 200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன், கடந்த 20ம் தேதி பதவியேற்றார். இதையொட்டி முன்னெப்போதும் இல்லாத அளவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 6ம் தேதி டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்திற்குள் கலவரத்தில் ஈடுபட்டதால், பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தது. தலைநகரில் 25 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

இந்நிலையில், பைடன் பதவியேற்பு விழாவிற்கான பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்ட வீரர்களில் சுமார் 200 தேசிய பாதுகாப்பு படை வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்ற வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. எனவே, பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிகிறது.

அமெரிக்காவில் கொரோனா வைரசால் இதுவரை 4.10 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த இரு தினங்களாக பலி எண்ணிக்கை 4000 என்ற அளவில் உள்ளது. 

அடுத்த 100 நாட்களுக்கு மக்கள் முக கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருவோர் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News