உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

ஆரோவில்லில் வெளிநாட்டினர் பங்கேற்கும் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு போலீஸ் தடை கலெக்டரை சந்திக்க நிர்வாகிகள் முடிவு

Published On 2022-01-12 09:44 GMT   |   Update On 2022-01-12 09:44 GMT
ஆரோவில்லில் வெளிநாட்டினர் பங்கேற்கும் மஞ்சு விரட்டு நிகழ்ச்சிக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.
சேதராப்பட்டு: 
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல்  பண்டிகையின்போது காணும் பொங்கல் அன்று குயிலாப் பாளையத்தில் நடக்கும் மஞ்சுவிரட்டு பிரசித்தி பெற்றது. 

இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் அதிகப்படியான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமிழ் கலாச்சார உடை அணிந்து இதில் பங்கேற்பார்கள்.  மாடுகள் அலங்கரிக் கப்பட்டு மாட்டின் மீது பழங்களையும், பலூன் களையும் கட்டி  மாட்டை விரட்டுவார்கள். 

அப்போது அங்கு கூடி யிருக்கும் வெளிநாட்டினர் உற்சாகத்துடன் இந்த நிகழ்ச்சியை காண்பதுண்டு. மேலும் தமிழர்களுடன் வெளி நாட்டினர் உறவினர் போல் உறவாடுவதும், ஒருவருக் கொருவர் மாறிமாறி முகத்தில் வண்ணங்களை பூசி மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த விழாவினை காண நூற்றுக்கணக்கான வெளி யூர், உள்ளூர் பொது மக்கள் கூடுவதுண்டு.

தற்போது நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று காரணமாக வருகிற 16&ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை)  தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளன. அதே நாளில்  காணும் பொங்கல் விழா என்பதால் அன்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை வழக்கம்போல் நடத்த கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருணிடம் குயிலாப்பாளையம் பஞ்சாயத்து நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். 

தமிழக அரசின் முழு ஊரடங்கு காரணமாக அன்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை நடத்த கூடாது என்று துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் தெரிவித்தார்.

இந்நிலையில் எளிமையாக நடத்திக் கொள்வதாக ஊர் பஞ்சாயத்து நிர்வாகிகள் கூறிவந்த நிலையில் முழுவதுமாக அன்றைக்கு எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என்று துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் திட்டவட்டமாக கூறிய நிலையில், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெற்று வரும் இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி விழுப்புரம் மாவட்ட  கலெக்ட மோகனை குயிலாப்பாளையம் ஊர் பஞ்சாயத்து நிர்வாகிகள் சந்திக்க உள்ளனர்.
Tags:    

Similar News