இந்தியா
மத்திய மந்திரி நிதின் கட்கரி

ஆர்.எஸ்.எஸ் மருத்துவமனையில் இந்துக்களுக்கு மட்டும் சிகிச்சை? - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பதில்

Published On 2022-04-15 05:08 GMT   |   Update On 2022-04-15 05:08 GMT
மத்திய மந்திரி நிதின் கட்கரி மகாராஷ்டிராவில் அமைச்சராக இருந்தபோது நடைபெற்ற ஒரு நிகழ்வை நினைவுக்கூர்ந்தார்.
புனே:

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புனேவில் உள்ள சிங்ஹாகாத் பகுதியில் மருத்துவமனை ஒன்றை திறந்து வைத்தார். அப்போது அவர் மகாராஷ்டிராவில் மந்திரியாக இருந்தபோது நடைபெற்ற ஒரு நிகழ்வை நினைவுக்கூர்ந்தார். அதில் அவர் கூறியதாவது:-

நான் மகாராஷ்டிராவில் மந்திரியாக இருந்தபோது மறைந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் கேபி ஹெட்கேவார் பெயரில் அவுரங்காபாத்தில் மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டது. அதை திறப்பதற்கு ஆர்.எஸ்.எஸ் சார்பில் தொழிலதிபர் ரத்தன் டாடாவை அழைத்திருந்தோம்.  

அந்த நிகழ்ச்சிக்கு வந்த டாடா இந்த மருத்துவமனையில் இந்துக்களுக்கு மட்டும் தான் சிகிச்சை அளிப்பீர்களா என கேட்டார். நான் ஏன் என்று வினவினேன். இந்த மருத்துவமனை ஆர்.எஸ்.எஸ் கட்டியது அல்லவா என்றார். 

அதற்கு நான், மருத்துவமனை அனைத்து சமூகத்திற்குமானது. ஆர்.எஸ்.எஸ்ஸில் மத அடிப்படையில் வகுப்புவாதம் என்பதே கிடையாது என்றேன். உடனே டாடா மகிழ்ச்சியடைந்தார்.

இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.
Tags:    

Similar News