செய்திகள்
கோப்புபடம்.

திருப்பூரில் எலாஸ்டிக் விலை 15 சதவீதம் உயர்வு

Published On 2021-10-22 07:07 GMT   |   Update On 2021-10-22 07:07 GMT
பாலியெஸ்டர் நூல் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. கடந்த 15 நாளில் மட்டும் கிலோவுக்கு ரூ.25அதிகரித்துள்ளது.
திருப்பூர்:

திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர் மற்றும் வர்த்தகர்கள் சங்க அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க தலைவர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். பொருளாளர் சந்திரமோகன், உறுப்பினர் உலகநாதன் முன்னிலை வகித்தனர். செயலாளர் சவுந்தரராஜன் வரவேற்றார். துணை தலைவர் செல்வராஜ் நன்றி கூறினார்.

கூட்டத்தில் பாலியெஸ்டர் நூல் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. கடந்த 15 நாளில் மட்டும் கிலோவுக்கு ரூ.25அதிகரித்துள்ளது. கேரள மழையால் ரப்பர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த காரணங்களால் எலாஸ்டிக் உற்பத்தி செலவினங்கள் உயர்ந்துள்ளன. எனவே எலாஸ்டிக் விலை, 15 சதவீதம் உயர்த்தப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. 

திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினர் விலை உயர்வு வழங்கி கைகொடுக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Tags:    

Similar News