தொழில்நுட்பம்

மூன்று கேமராவுடன் உருவாகும் சோனி ஸ்மார்ட்போன்

Published On 2019-02-23 05:26 GMT   |   Update On 2019-02-23 05:26 GMT
சோனி நிறுவனத்தின் எக்ஸ்பீரியா 1 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் மூன்று பிரைமரி கேமராக்கள் காணப்படுகின்றன. #Xperia1 #Smartphone



சோனி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா நெருங்கி வரும் நிலையில் புதிய சோனி ஸ்மார்ட்போனின் விவரங்கள் தெரியவந்துள்ளது.

முன்னதாக சோனி நிறுவனம் எக்ஸ்.இசட்.4 ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், எக்ஸ்பீரியா 1 எனும் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக தற்சமயம் கிடைத்திருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல ஸ்மார்ட்போன் டிப்ஸ்டரான எவான் பிளாஸ் எக்ஸ்பீரியா 1 மாடலின் விவரங்களை வெளியிட்டிருக்கிறார்.

அதன்படி சோனி நிறுவன ஸ்மார்ட்போன்களில் எக்ஸ்பீரியா 1 முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது. 



தற்போதைய ஸ்மார்ட்போன்களை போன்று எக்ஸ்பீரியா 1 மாடலில் கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன்களின் இடையே பொருத்தப்பட்டிருக்கிறது.

எக்ஸ்பீரியா 1 மாடலில் 21:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 4K ஹெச்.டி.ஆர். OLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இது எக்ஸ்.இசட் பிரீமியம் மாடலின் மேம்பட்ட ஸ்மார்ட்போனாக இருக்கும் என தெரிகிறது. 

ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் என்பதால் புதிய சோனி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 4400 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம் என்றும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டு இயங்கும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News