செய்திகள்

ஜெயலலிதா இல்லாததால் குளிர்விட்டு போய் விட்டது- அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

Published On 2018-11-08 06:22 GMT   |   Update On 2018-11-08 06:22 GMT
ஜெயலலிதா இல்லாததால் திரைத்துறையினருக்கு குளிர்விட்டு போய்விட்டதாகவும், ஹீரோக்கள் தங்களை முன்னிலைப்படுத்த பிறரை அவமதிப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். #ADMK #TNMinister #Jayakumar #Sarkar
சென்னை:

அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- ‘சர்கார்’படத்தில் ஜெயலலிதாவின் இயற்பெயரை பயன்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் கோமளவல்லி என்பது ஜெயலலிதாவின் இயற்பெயர் இல்லை என்று தினகரன் கூறி இருக்கிறாரே?

பதில்:- திரைப்படம் எடுப்பவர்கள், நடிகர்- நடிகைகளுக்கு இப்போது ஒரு பே‌ஷனாகி விட்டது. அம்மா இல்லாததால் அவர்களுக்கு குளிர்விட்டு போய் விட்டது. அம்மா இருக்கும்போது இதுபோல் ஏதாவது ஒரு படத்தில் கருத்து வந்ததுண்டா? என்று யோசியுங்கள்.

இவர்கள் எல்லாம் அம்மா இருக்கும்போதே எடுத்திருந்தால் இவர்களின் வீரத்தை மெச்சி இருப்போம். அவரவருக்கு ஒரு ஆசை இருக்கும். திரைப்படத்தில் முதல்-அமைச்சர் கேரக்டர் எடுத்து நல்லது செய்ய வேண்டும் என்பது போல பல ஆசைகள் இருக்கும். அது தவறு இல்லை. ஆனால் ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் மக்கள் தீர்மானம் செய்வதுதான்.

அவரவர் கொள்கைகளை சொல்லி, லட்சியங்களை சொல்லி அந்த கருத்துக்களை பிரதிபலிப்பதாக படம் இருந்தால் அது ஏற்றுக்கொள்ள வேண்டிய வி‌ஷயம்.

ஆனால் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக பிறருடைய உணர்வுகளை மிதித்து அவர்களின் எண்ணங்களை சிதைத்து, எல்லா தமிழ் மக்களின் உணர்வுகளை அழிக்கும் செயலை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஒரு திரைப்படம் மக்களுக்கு நல்ல வி‌ஷயங்களை சொல்லுகின்ற சாதனமாக இருக்க வேண்டும். அந்த அடிப்படையில் எம்.ஜி.ஆர். படங்களுக்கெல்லாம் எந்த காலத்திலும் விமர்சனம் எழுந்ததில்லை.

இந்த உலகம் உள்ள வரை எல்லோராலும் போற்றப்படக் கூடிய ஒரு தலைவர் எம்.ஜி.ஆர். இவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். போல வந்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அது ஒரு காலத்திலும் முடியாது.


ஒரே ஒரு எம்.ஜி.ஆர்.தான். ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் மீண்டு வருவாரோ என்பது போல இவர்கள் அழுது புரண்டாலும், தலை கீழாக நின்றாலும் இவர்களுக்கு எம்.ஜி.ஆர். போன்ற அங்கீகாரத்தை மக்கள் கொடுக்க மாட்டார்கள். உங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளுங்கள்.

அதற்காக மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தாதீர்கள். அப்படி செய்யும் பட்சத்தில் இந்த திரைப்பட குழுவினர் மீது சட்ட நடவடிக்கை இருக்கும்.

கேள்வி:- கோமளவல்லி என்பது ஜெயலலிதாவின் இயற்பெயரா இல்லையா?

பதில்:- எங்களை பொறுத்தவரை கதைகளை பலர் எழுதி இருக்கிறார்கள். அதை குறை சொல்லவில்லை. ஆனால் எதற்காக தேவையில்லாமல் அந்த பெயரை வைக்க வேண்டும். அதுதான் எங்களுடைய கேள்வி. எவ்வளவோ பெயர் இருக்கிறதே. அப்படி இருக்கும் போது ஏன் அந்த பெயரை வைக்க வேண்டும். காழ்ப்புணர்ச்சியுடன் இழிவுபடுத்தும் செயலாகவே அதை கருத முடிகிறது. எனவே மனதை புண்படுத்தும் செயலை எந்த நிலையிலும் ஏற்க முடியாது.

கேள்வி:- பண மதிப்பிழப்பு நடந்து இன்றுடன் 2 வருடம் முடிந்துள்ளது. என்ன மாற்றம் வந்துள்ளது என்று நினைக்கிறீர்கள்?

பதில்:- சிறந்த தீர்ப்பு வழங்குபவர்கள் மக்கள்தான். சீர்திருத்த நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டதா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதற்கான விடை 2019-ம் ஆண்டு தெரியும்.

ப:- அது அவர்களின் கனவாக இருக்கலாம். ஆனால் அது கானல்நீர்தான். அது நடக்காத ஒன்று.

கே:- தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் நாளை சசிகலாவை சந்திக்கப்போவதாக தகவல் வந்துள்ளதே?

ப:- அவர்கள் யாரை சந்தித்தாலும் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. முடிந்தால் உலகத்தில் உள்ள எல்லா தலைவர்களையும் சந்திக்கட்டும்.

கே:- சந்திரபாபுநாயுடு எதிர்க்கட்சிகளை திரட்டி பாராளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைக்க முயன்று வருகிறாரே? அதை எதிர்கொள்ள தமிழகத்தில் அ.தி.மு.க. தயாராக இருக்கிறதா?

ப:- 2016-ம் ஆண்டு கூட வலுவான கூட்டணிதான் வைத்தார்கள். ஆனால் என்ன ஆச்சு? ரிசல்ட் ஜீரோ. அதேபோல் 2019-லும், 2021-லும் ஜீரோ தான் பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #Jayakumar #Sarkar
Tags:    

Similar News