செய்திகள்
கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் நிலவரம்

சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் அதிகம் உள்ள மாநிலங்கள்

Published On 2021-05-15 11:05 GMT   |   Update On 2021-05-15 11:05 GMT
தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது கவலைக்குரிய விஷயம் என்று மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் கூறினார்.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது படிப்படியாக குறைந்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3,26,098 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 36,73,802 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கர்நாடகா, மகாராஷ்டிரா, கேரளா, ராஜஸ்தான், ஆந்திரா, தமிழ்நாடு, உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், குஜராத், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர். 8 மாநிலங்களில் 50000 முதல் ஒரு லட்சம் நபர்கள் சிகிச்சையில் உள்ளனர். 17 மாநிலங்களில் 50000-க்கும் குறைவாக உள்ளனர். 

புதிய தொற்று அதிக அளவில் பதிவான மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், குஜராத், சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களில் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகிறது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறி உள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது கவலைக்குரிய விஷயம் என்றும் அவர் கூறினார்.
Tags:    

Similar News