செய்திகள்
பரிசோதனைக்கான சாம்பிள்கள்

கொரோனா தொற்றை கண்டறிய இதுவரை 13.17 கோடி சாம்பிள்கள் சோதனை -ஐசிஎம்ஆர்

Published On 2020-11-22 07:15 GMT   |   Update On 2020-11-22 07:15 GMT
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்காக நேற்று மட்டும் 10.75 லட்சம் சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 91 லட்சத்தை நெருங்கி உள்ளது. இதுவரை 85.21  லட்சம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 4.40 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். உயிரிழப்பு 1.46 சதவீதமாகவும், குணமடையும் விகிதம் 93.69 சதவீதமாகவும் உள்ளது.

கொரோனா தொற்றை விரைவாக கண்டறிந்து, சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவாக பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் இந்தியாவில் பரிசோதனை செய்யப்பட்ட சாம்பிள்களின் மொத்த எண்ணிக்கை 13.17 கோடியாக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 13,17,33,134 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று மட்டும் 10,75,326 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

சில வட மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை உயர்ந்து வருவதால், அனைத்து மாநிலங்களிலும் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News