செய்திகள்
சிறுவனை மீட்ட பேரிடர் மீட்புக்குழு

8 மணி நேர போராட்டம் வெற்றி - ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் உயிருடன் மீட்பு

Published On 2021-06-14 20:52 GMT   |   Update On 2021-06-14 20:52 GMT
ஆழ்குழாய் கிணறுகள் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தியபோதும், பலர் இன்னும் அலட்சியமாகவே உள்ளனர்.
லக்னோ:

பயன்பாட்டில் இல்லாத ஆழ்குழாய் கிணறுகளை சரியான முறையில் மூடப்படாததால் பல குழந்தைகளின் உயிர்கள் பறிபோய் உள்ளன. இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். தவறு செய்தவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனாலும், எபலர் ஆழ்குழாய் கிணறு விஷயத்தில் இன்னும் அலட்சியமாகவே உள்ளனர். 

இதற்கிடையே, உத்தர பிரதேச மாநிலம் பதேகாபாத் மாவட்டம் தாரியாயி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் அமைத்திருந்த ஆழ்குழாய் கிணறு சரியாக மூடப்படாமல் இருந்துள்ளது. நேற்று அந்த நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்துவிட்டான்.  


 
தகவலறிந்து போலீசார் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். முதல் கட்டமாக குழந்தைக்கு தேவையான ஆக்சிஜன், குளுகோஸ் ஆகியவற்றை வழங்கினர்.

இந்நிலையில், 8 மணி நேர போராட்டத்துக்கு பிறகு 4 வயது சிறுவன் மாலையில் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டான். சிறுவன் சோர்வாக இருந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளான்.

8 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சிறுவனை உயிருடன் மீட்ட பேரிடர் மீட்புக் குழுவினருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Tags:    

Similar News