ஆட்டோமொபைல்
மெர்சிடிஸ் ஜிஎல்சி 43 ஏஎம்ஜி கூப்

ரூ. 76 லட்சம் பட்ஜெட்டில் புதிய பென்ஸ் கார் அறிமுகம்

Published On 2020-11-04 10:39 GMT   |   Update On 2020-11-04 10:39 GMT
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய ஜிஎல்சி 43 ஏஎம்ஜி கூப் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி 43 ஏஎம்ஜி 4மேடிக் கூப் மாடல் இந்திய சந்தையில் ரூ. 76.70 லட்சம், எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் ஏஎம்ஜி மாடல் ஆகும்.

இந்த மாடல் பூனேவின் சக்கன் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டது. மெர்சிடிஸ் நிறுவனத்தின் மற்ற ஏஎம்ஜி மாடல்கள் சிபியு முறையில் இந்தியா கொண்டுவரப்படுகின்றன. புதிய மெர்சிடிஸ் மாடலில் 3.0 லிட்டர் வி6 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.



இந்த என்ஜின் 385 பிஹெச்பி பவர், 520 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 4.9 நொடிகளில் எட்டிவிடும்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்சி 43 4மேடிக் கூப் மாடலில் பேன்னமெரிக்கா கிரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், 20 இன்ச் ஏஎம்ஜி ஸ்பெக் அலாய் வீல்கள், புதிய எல்இடி லைட்கள், குவாட் டிப் ஏஎம்ஜி பெர்பார்மன்ஸ் எக்சாஸ்ட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News