லைஃப்ஸ்டைல்
கொழுக்கட்டை பாயாசம்

தித்திப்பான கொழுக்கட்டை பாயாசம்

Published On 2021-02-18 09:10 GMT   |   Update On 2021-02-18 09:10 GMT
மாலை நேரத்தில் சாப்பிட அருமையா இருக்கும் இந்த கொழுக்கட்டை பாயாசம். பால் கொழுக்கட்டை போல் இருக்கும் இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

பச்சரிசி - 1 கப்
தூளாக்கிய வெல்லம் - 1 கப்
தேங்காய் துருவல் - அரை கப்
கடலைப்பருப்பு - அரை கப்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
காய்ச்சிய பால் - 2 கப்
எண்ணெய், உப்பு - தேவைக்கு
உலர் பழங்கள் - சிறிதளவு
தண்ணீர் - தேவைக்கு

செய்முறை:

பச்சரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து நீரை வடிகட்டிவிட்டு அரைத்துக்கொள்ளவும்.

அதுபோல் கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, குழையாமல் வேகவைத்துக்கொள்ளவும்.

வாணலியில் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை போட்டு கொதிக்கவிடவும்.

பாகு பதத்துக்கு வந்ததும் ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து கிளறவும்.

பிறகு கடலைப்பருப்பை சேர்த்து கிளறவும்.

அதைத்தொடர்ந்து காய்ச்சிய பாலை ஊற்றி கொதிக்க விடவும்.

ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

பின்னர் வாணலியில் 3 கப் தண்ணீர் ஊற்றி சிறிதளவு எண்ணெய், உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

கொதிக்க தொடங்கியதும் அரிசி மாவை கொட்டி கிளறி வேகவிட்டு இறக்கவும்.

பின்னர் மாவு கலவையை கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வேகவைத்து எடுக்கவும்.

அதனை வெல்லப்பாகு, கடலைப்பருப்பு கலவையில் சேர்த்து கலக்கவும்.

அதில் உலர் பழங்களை தூவி பாயசமாக பருகலாம்.
Tags:    

Similar News