செய்திகள்
முதல் மந்திரி உத்தவ் தாக்கரே

கொரோனாவை வெற்றி கொள்ள மக்களின் அர்ப்பணிப்பும், ஈடுபாடும் அவசியம் - உத்தவ் தாக்கரே

Published On 2020-10-11 20:21 GMT   |   Update On 2020-10-11 20:21 GMT
மகாராஷ்டிராவில் 70 முதல் 80 சதவீதத்தினருக்கு கொரோனா அறிகுறியில்லாமல் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர் என்று முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
மும்பை:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் தொற்று கட்டுக்குள் வர மறுக்கிறது.

இந்நிலையில், முதல் மந்திரி உத்தவ் தாக்கரே பொதுமக்களுடன் இணைய வாயிலாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

மகாராஷ்டிரா மாநிலத்தில்  70 முதல் 80 சதவீதத்தினருக்கு கொரோனா அறிகுறியில்லாமல் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர்.

கொரோனாவுக்கு எதிரான பேரில் மருந்துகள் கண்டறியும் வரை முகக் கவசம் மட்டுமே தற்காப்புக் கவசமாக பயன்படுத்த வேண்டும். பெருந்தொற்றுக்கு எதிரான போரில்  வெற்றி கொள்ள மக்களின் அர்ப்பணிப்பும், ஈடுபாடும் அவசியம். 

முகக் கவசத்தை அணிய வேண்டுமா, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டுமா அல்லது கட்டுப்பாடுகளுடனே இருக்க வேண்டுமா? என்பதை  மக்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

தற்போது துவங்கப்பட்டுள்ள எதுவும் மீண்டும் மூடப்படாது. அதிக அளவு மக்கள் பயணிப்பர் என்பதால் புறநகர் ரெயில் சேவை துவங்க நான் விரும்பவில்லை என தெரிவித்தார். 
Tags:    

Similar News