செய்திகள்
மழையில் நனைந்த நெல் மணிகளை காணலாம்

நெல்மணிகள், மழையில் நனைந்து முளைக்கும் அபாயம்- விவசாயிகள் வேதனை

Published On 2021-05-21 09:01 GMT   |   Update On 2021-05-21 09:01 GMT
ஒகளூர் நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படாத நெல்மணிகள், கடந்த 2 நாட்களாக பெய்த மழையில் நனைந்து முளைத்துவிடும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் அத்தியூர், ஒகளூர், ஆடுதுறை, கழனிவாசல், கீழ குடிக்காடு கிராமங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் நெல் மணிகளை ஒகளூர் நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகின்றனர். கொள்முதல் நிலையத்தில் கடந்த 10 நாட்களாக விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகள் எடை போடப்படாமல் சாலையில் கிடந்துள்ளன.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மாலையில் மழை பெய்து வருகிறது. மழையில் நெல்மணிகள் நனைந்து முளை விடும் அபாயம் உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையுடன், நெல்மணிகளை சாலையில் காய வைத்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அனைத்து நெல் மூட்டைகளையும் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் தற்போது ஊரடங்கு காலமாக இருப்பதால், நெல் மூட்டைகளை கொள்முதல் செய்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டே, விவசாயிகள் தங்கள் குடும்ப செலவுகளை செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே விரைந்து நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இதேபோல் அகரம் சீகூர், கோயில்பாளையம், கீழப்புலியூர் நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது.
Tags:    

Similar News