பைக்
4மைகா ஸ்கூட்டர்கள்

உலக அளவில் கவனம் பெறும் புதிய ஸ்கூட்டர்- இந்தியாவில் எப்போது அறிமுகம்?

Published On 2022-02-21 10:06 GMT   |   Update On 2022-02-21 10:13 GMT
ஓட்டுனர் பின் சீட்டினை சாய்த்து முதுகு தலையணையாகவும் பயன்படுத்தி கொள்ளும் வகையில் இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தைவானை சேர்ந்த எஸ்.ஒய்.எம் ஆட்டோமொபைல் நிறுவனம் புதிய 125சிசி மற்றும் 150சிசி ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர்களுக்கு 4மைகா என பெயரிடப்பட்டுள்ளது.

இந்த 4மைகா ஸ்கூட்டர் பிளவுப்பட்ட சீட்டுகளை கொண்டுள்ளது. பின் சீட்டை நீக்கி கூடுதலாக பொருட்களை வைக்கும் வகையிலும், ஓட்டுனர் பின் சீட்டினை சாய்த்து முதுகு தலையணையாக பயன்படுத்தும் வகையிலும் இந்த ஸ்கூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த ஸ்கூட்டரை ஓட்டுபவர்கள் கால் வைப்பதற்காக 410மிமீ அளவில் இட வசதி தரப்பட்டுள்ளது. இங்கேயும் பயணிகள் பொருட்களை வைத்து செல்லலாம். 

4மைகா 125 ஸ்கூட்டரில் 124.7சிசி SOHC என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகப்பட்சமாக 9.5 பிஎஸ் மற்றும் 9.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் தன்மை கொண்டது. 150 சிசி ஸ்கூட்டரில் 11.3 பிஎஸ் மற்றும் 12.25 என்எம் டார்க் திறனை பெறும் ஆற்றல் தரப்பட்டுள்ளது. சஸ்பென்ஷனுக்காக முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் இரட்டை ஷாக் அப்சார்பர்களும் தரப்பட்டுள்ளன.



பிரேக் அமைப்பில் முன்பக்கத்தில் டிஸ்க்கும், பின்பக்கத்தில் ட்ரம்மும் வழங்கப்பட்டுள்ளன. கூடுதல் பாதுகாப்பிற்காக சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் -ம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர்களில் 10-இன்ச் சக்கரங்களும், 100/90 என்ற அளவுகளில் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டரின் எடை கிட்டத்தட்ட 125 கிலோ ஆகும்.

தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரை இந்த ஸ்கூட்டரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், யுஎஸ்பி சார்ஜிங் துளைகள் மற்றும் ஹசார்ட் விளக்குகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. 

இந்த ஸ்கூட்டர் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது. இருப்பினும் இது இந்தியாவில் எப்போது அறிமுகமாகும் என்ற தகவல் எதுவும் தரப்படவில்லை.

Tags:    

Similar News