தொழில்நுட்பச் செய்திகள்
ஒப்போ பைண்ட் என்

ஒப்போ பைண்ட் என் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2021-12-16 11:46 GMT   |   Update On 2021-12-16 11:46 GMT
ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி பைண்ட் என் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.


ஒப்போ நிறுவனம் இன்னோ டே 2021 நிகழ்வில் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. பைண்ட் என் பெயரில் அழைக்கப்படும் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3, ஹூவாய் மேட் எக்ஸ்2 மற்றும் இதர மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

அம்சங்களை பொருத்தவரை ஒப்போ பைண்ட் என் திறக்கப்பட்ட நிலையில் 7.1 இன்ச் டிஸ்ப்ளேவும், மடிக்கப்பட்ட நிலையில் 5.49 இன்ச் டிஸ்ப்ளேவும் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அதிகபட்சம் 2 லட்சம் முறைக்கும் அதிகமாக மடிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 



இத்துடன் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி, 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 35 வாட் சூப்பர்வூக் மற்றும் 15 வாட் ஏர்வூக் சார்ஜிங், 10 வாட் ரிவர்ஸ் சார்ஜிங் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த கலர்ஓ.எஸ். 12, ஆண்ட்ராய்டு மல்டி-டாஸ்கிங் ஜெஸ்ட்யூர்களுடன் புதிய ஜெஸ்ட்யூர்கள் வழங்கப்பட்டுள்ளன.

புகைப்படங்களை எடுக்க 50 எம்.பி. கேமரா, 16 எம்.பி. அல்ட்ரா வைடு சென்சார், 13 எம்.பி. டெலிபோட்டோ கேமரா மற்றும் இரண்டு செல்பி கேமராக்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பிரைமரி கேமராவை கொண்டே செல்பி படங்களும் எடுத்துக் கொள்ளலாம். 

ஒப்போ பைண்ட் என் விற்பனை சீனாவில் டிசம்பர் 23 ஆம் தேதி துவங்குகிறது. இதன் 8 ஜி.பி./ 256 ஜி.பி. விலை இந்திய மதிப்பில் ரூ. 92,290 என்றும் 12 ஜி.பி. / 512 ஜி.பி. விலை இந்திய மதிப்பில் ரூ. 1,07,873 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News