உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எல்.ஐ.சி. ஊழியர்கள்.

பாளையில் இன்று எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-05-04 11:01 GMT   |   Update On 2022-05-04 11:01 GMT
பாளை பஸ் நிலையம் அருகே நெல்லை கோட்ட எல்.ஐ.சி அலுவலகத்தில் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை:

மத்திய அரசு எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்பதை கண்டித்து இன்று நாடு முழுவதும் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டத்திலும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாளை பஸ் நிலையம் அருகே உள்ள நெல்லை கோட்ட எல்.ஐ.சி. அலுவலகத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அலுவலகத்தை விட்டு வெளிநடப்பு செய்து வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எல்.ஐ.சி. ஊழியர்கள் சங்கத்தின் நெல்லை கோட்ட தலைவர் முத்துக்குமாரசாமி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பொன்னையா முன்னிலை வகித்தார்.

நிர்வாகிகள் பட்டன், முருகன், கண்ணன், துரைராஜ் மற்றும் முகவர் சங்கங்களின் நெல்லை கோட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை கோட்டத்தில் இன்று 16 கிளைகளில் சுமார் 348 ஊழியர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News