ஆன்மிகம்
காட்கோபரில் ஸ்ரீமன் அய்யா நாராயண சுவாமியின் கார்த்திகை திருவிழா வாகன பவனி

காட்கோபரில் ஸ்ரீமன் அய்யா நாராயண சுவாமியின் கார்த்திகை திருவிழா

Published On 2019-12-02 05:36 GMT   |   Update On 2019-12-02 05:36 GMT
மும்பை காட்கோபர் ஸ்ரீமன் அய்யா நாராயண சுவாமியின் நிழல்தாங்கல் கார்த்திகை திருவிழாவில் உகப்படிப்பு பணிவிடை மற்றும் திருஏடு வாசிப்பு முதல் நாளில் நடந்தது.
மும்பை காட்கோபர் ஸ்ரீமன் அய்யா நாராயண சுவாமியின் நிழல்தாங்கல் கார்த்திகை திருவிழா கடந்த 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் உகப்படிப்பு பணிவிடை மற்றும் திருஏடு வாசிப்பு முதல் நாளில் நடந்தது. இதனை தொடர்ந்து வந்த நாட்களில் அய்யாவின் திருக்கல்யாணம், அனுமார் வாகனத்தில் பவனி, திருவிளக்கு பணி விடை, விளையாட்டு போட்டி, கவிஞர் செந்தூர் நாகராஜனின் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்தது.

நிறைவு நாளான நேற்று காலை 7 மணி அளவில் உகப்படிப்பு நடந்தது. 9 மணி அளவில் அய்யாவின் நிழல் தாங்கலில் இருந்து வாகன பவனி புறப்பட்டது. காவ்தேவியில் இருந்து சந்தனப்பால் எடுத்து அய்யாவின் நிழல்தாங்கலில் வந்து சேர்ந்தது. இதனை தொடர்ந்து மதியம் உச்சி பணிவிடை மற்றும் அன்னதானம் நடந்தது. மாலை 7 மணி அளவில் பட்டாபிஷேகம் மற்றும் திருஏடு வாசிப்பு நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது. 
Tags:    

Similar News