தொழில்நுட்பம்
ஸ்மார்ட்போன் பயன்பாடு

பத்து ஆண்டுகளில் இல்லாத நிலையில் ஸ்மார்ட்போன் விநியோகம்

Published On 2020-04-04 04:22 GMT   |   Update On 2020-04-04 04:22 GMT
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஸ்மார்ட்போன் விநியோகம் பத்து ஆண்டுகளில் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகின் பெரும்பாலான துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதில் தொழில்நுட்ப பிரிவில் ஸ்மார்ட்போன் சந்தை அதிகளவு பாதிப்பை சந்தித்து இருக்கிறது. சிசிஎஸ் இன்சைட் அறிக்கையின் படி ஸ்மார்ட்போன் சந்தை அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மட்டும் சுமார் 126 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 25 கோடி யூனிட்கள் குறைவு ஆகும். அந்த வகையில் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவு என சிசிஎஸ் தெரிவித்துள்ளது.



கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஸ்மார்ட்போன் விநியோகம் 2020 இரண்டாவது காலாண்டில் 29 சதவீதம் வரை சரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர ஸ்மார்ட்போன் விநியோகம் தொடர்புடைய இதர பணிகளும் ஆண்டு இறுதியில் பாதிப்பை சந்திக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

உலகம் முழுக்க வாடிக்கையாளர்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கியிருக்கின்றனர். பெரும்பாலான நிறுவனங்களும் விநியோக பணிகளில் அதிக பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. இதன் காரணமாக வாடிக்கைாயளர்களால் புதிய ஸ்மார்ட்போன்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இதுதவிர மக்களின் பொருளாதார நெருக்கடி சூழலும் அவர்களை ஸ்மார்ட்போன்களை வாங்க விடாத நிலைக்கு தள்ளி இருக்கிறது. அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற பொருட்களை வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் செலுத்த மாட்டார்கள். 2019 ஆண்டு விடுமுறை காலத்தில் விற்பனையானதை விட இந்த ஆண்டு விடுமுறை கால விற்பனை மூன்று சதவீதம் வரை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News