தொழில்நுட்பம்
ஒப்போ ரெனோ 4 ப்ரோ

48 எம்பி குவாட் கேமராக்கள் கொண்ட ஒப்போ ரெனோ4 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்

Published On 2020-08-01 04:16 GMT   |   Update On 2020-08-01 04:16 GMT
ஒப்போ நிறுவனத்தின் புதிய ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி தனது ரெனோ 4 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து உள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் எஃப்ஹெச்டி பிளஸ் இ3 சூப்பர் AMOLED 3D பார்டர்லெஸ் சென்ஸ் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. 

இதன் டிஸ்ப்ளேவில் ஒற்றை பன்ச் ஹோல் கொண்ட 32 எம்பி செல்ஃபி கேமரா, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. இது ஸ்மார்ட்போனினை 0.34 நொடிகளில் அன்லாக் செய்யும் திறன் கொண்டு இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் மற்றும் 8 ஜிபி ரேம் கொண்டிருக்கும் ரெனோ 4 ப்ரோ ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர் ஒஎஸ் 7.2 கொண்டுள்ளது.



ஒப்போ ரெனோ 4 ப்ரோ சிறப்பம்சங்கள்

- 6.55 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ 3D 90Hz AMOLED 90Hz வளைந்த டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர்
- அட்ரினோ 618 GPU
- 8 ஜிபி LPDDR4x ரேம்
- 128 ஜிபி UFS 2.1 மெமரி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் கலர்ஒஎஸ் 7.2
- டூயல் சிம் ஸ்லாட்
- 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.7, EIS, எல்இடி ஃபிளாஷ்
- 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, f/2.2
- 2 எம்பி மேக்ரோ கேமரா
- 2 எம்பி மோனோ கேமரா, f/2.4
- 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.4
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யுஎஸ்பி டைப்-சி
- 4000 எம்ஏஹெச் பேட்டரி
- 65 வாட் சூப்பர் பிளாஷ் சார்ஜ்

ஒப்போ ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் ஸ்டாரி நைட் மற்றும் சில்கி வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 34990 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் அமேசானில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது.
Tags:    

Similar News