தொழில்நுட்பச் செய்திகள்
ரியல்மி க்யூ2எஸ் இயர்பட்ஸ்

டோல்பி அட்மாஸ் தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகியுள்ள ரியல்மி இயர்பட்ஸ்

Published On 2022-03-04 08:23 GMT   |   Update On 2022-03-04 08:23 GMT
ஆப்பிள் சாதனங்களில் மட்டுமே டோல்பி அட்மாஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில் ரியல்மி நிறுவனம் தனது இயர்போனில் இந்த தொழில்நுட்பத்தை அளித்துள்ளது.
ரியல்மி நிறுவனம் புதிய ஒயர்லெஸ் இயர்பட்ஸை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு பட்ஸ் க்யூ2எஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த Q2s இயர்பட்டில் டோல்பி அட்மோஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. 

இந்த டோல்பி அட்மாஸ் மூலம் ஆடியோவை கேட்கும்போது துல்லிய தரம் வெளிப்படும். இசை கேட்பவர்களால் வெவ்வேறு இசைக்கருவிகளின் துல்லியத்தையும், இசை எந்த திசையில் இருந்து வருகிறது என்பதையும் அறிய முடியும்.

ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் மியூசிக்கில் டோல்பி அட்மோஸ் மியூசிக்கை அறிமுகம் செய்ததில் இருந்து மக்கள் ஆடியோ சாதனங்களில் அதிநவீன தொழில்நுட்பங்களை எதிர்பார்க்க தொடங்கினர். 

ஆப்பிள் சாதனங்களில் மட்டுமே டோல்பி அட்மாஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில், ரியல்மி நிறுவனம் தனது இயர்பட்ஸிலும் இந்த தொழில்நுட்பத்தை அளித்துள்ளது.

இந்த இயர்பட்டில் 10mm டிரைவர்கள், 5.2 ப்ளூடூத்தை கொண்டுள்ளது. ஏஏசி, எஸ்.பிசி கோடக்குகளை இந்த இயர்பட்ஸ் சப்போர்ட் செய்யும். இந்த விலை மதிப்பில் மேற்கூறிய கோடக்குகளை சப்போர்ட் செய்யும் இயர்பட்கள் வேறு கிடையாது. மேலும் இந்த இயர்பட் 88m சூப்பர் லேட்டன்சி மோடுகளை வழங்குகிறது. இந்த இயர்பட்களை ஒருமுறை சார்ஜ் செய்தால் 30 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.

இந்திய மதிப்பில் இதன் விலை ரூ.2,400-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த இயர்போன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News