செய்திகள்
கைது

மதுரையில் மின்வாரிய ஊழியருக்கு கத்திக்குத்து- சிறுவர்கள் உள்பட 11 பேர் கைது

Published On 2021-06-20 10:55 GMT   |   Update On 2021-06-20 10:55 GMT
மதுரையில் மின்வாரிய ஊழியரை கத்தியால் குத்தியது தொடர்பாக சிறுவர்கள் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை வைத்தியநாதபுரம் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலை (வயது 23). தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வயர் மேனாக வேலை பார்த்து வருகிறார்.

இதே பகுதியில் வசிக்கும் கோபிநாத் (26) என்பவர் குடிபோதையில் வந்தார். அப்போது சுடலை- கோபிநாத் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் சுடலை நேற்று இரவு அந்த பகுதியில் நடந்து சென்றார். அப்போது கோபிநாத் 10-க்கும் மேற்பட்ட கூட்டாளிகளுடன் திரண்டு வந்து சுடலையை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சுடலைக்கு சரமாரி கத்திக்குத்து விழுந்தது.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சுடலையை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக சுடலை எஸ்.எஸ். காலனி போலீசில் புகார் செய்தார்.

இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மின் வாரிய ஊழியரை கத்தியால் குத்தியதாக வைத்தியநாதபுரம் கட்டிலக்கார தெரு காளீஸ்வரன் (21), கோபிநாத் (26), புது எல்லீஸ் நகர் ஆகாஷ் (22), கார்த்திக் என்கிற வேளாங்கண்ணி (19), வசந்த் (22), சார்லஸ் (21), தீபக் (21), செல்வ பாண்டி (18), புது எல்லீஸ் நகர் ஆலன் (19) மற்றும் 2 சிறுவர்கள் உள்பட 11 பேரை எஸ்.எஸ். காலனி போலீசார் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News