செய்திகள்
மின்சார ரெயில் (கோப்புப்படம்)

சென்னையில் 160 மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

Published On 2021-02-23 10:02 GMT   |   Update On 2021-02-23 10:02 GMT
கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் 160 மின்சார ரெயில் சேவையில் நாளை (24-ந்தேதி) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 3-வது ரெயில் பாதை பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை கடற்கரை- தாம்பரம்-செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் மார்க்கத்தில் புறநகர் சிறப்பு ரெயில் சேவையில் நாளை (24-ந்தேதி) முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரெயில் பயணிகளுக்கு தடையில்லா சேவை வழங்கும் வகையில் புதிய கால அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய திருத்தப்பட்ட புறநகர் சிறப்பு ரெயில்களுக்கான கால அட்டவணை மார்ச் மாதம் 13-ந்தேதி வரை மட்டும் அமலில் இருக்கும் என்று சென்னை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் 160 மின்சார ரெயில்கள் புதிய கால அட்டவணையில் இயக்கப்படுகிறது.

சென்னை-கடற்கரையில் இருந்து அதிகாலை 3.50 மணிக்கு சேவை தொடங்கி நள்ளிரவு 11.40 மணி வரை நடைபெறுகிறது. மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து முதல் சேவை அதகாலை 3.55 மணிக்கு தொடங்குகிறது.

நள்ளிரவு 11.59 மணிக்கு கடைசி சேவை தொடங்கி 12.54 மணிக்கு கடற்கரை நிலையம் வந்து சேருகிறது.

கடற்கரையில் இருந்து அதிகாலை 5.10 மணிக்கு புறப்படும் ரெயில் திருமால்பூரை காலை 8.40 மணிக்கு போய் சேருகிறது.

செங்கல்பட்டில் இருந்து அதிகாலை 4.20 மணிக்கு முதல் சேவை தொடங்குகிறது. 6.15 மணிக்கு கடற்கரை வந்து சேருகிறது.

காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் 15 நிமிடத்திற்கு ஒரு மின்சார ரெயில் இயக்கப்படுகிறது.

கடற்கரையில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் செங்கல்பட்டுக்கு நள்ளிரவு 12.30 மணிக்கு போய் சேருகிறது.

கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு 32 மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதே போல செங்கல்பட்டில் இருந்து கடற்கரைக்கு 32 சேவைகள் இயக்கப்படுகிறது. அரக்கோணத்திற்கு 4 ரெயில்கள் செல்கின்றன.

கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 3.50 மணி, 4.15, 4.35, 4.55, 5.10, 5.25, 5.40, 5.55 மற்றும் காலை 6.10, 6.25, 6.40, 6.55, 7.10, 7.25, 7.40, 7.55, 8.10, 8.25, 8.40, 8.55, 9.10, 9.25, 9.40, 9.55, 10.10, 10.25, 10.40, 10.55, பகல் 11.10, 11.25, 11.40, 11.55, 12.10, 12.25, 12.40, 12.55, 1.10, 1.25, 1.40, 1.55, 2.10, 2.25, 2.40, 2.55, 3.10, 3.25, 3.40. 3.55.

மாலை 4.10, 4.25 4.40, 4.55, 5.10, 5.25, 5.40, 5.55, 6.03, 6.10, 6.25, 6.40, 6.55, 7.10, 7.25, 7.40, 7.55, இரவு 8.10, 8.25, 8.40, 8.55, 9.10, 9.30, 9.50, 10.10, 10.30, 11.10, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் சேவை நடைபெறும்.
Tags:    

Similar News