செய்திகள்
பினராயி விஜயன்

கேரளாவில் பினராயி விஜயன் மந்திரிசபையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு

Published On 2021-05-04 04:50 GMT   |   Update On 2021-05-04 13:17 GMT
இடதுசாரி கூட்டணியில் ஈடுபட்டுள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பிலும் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரள சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

மீண்டும் பினராயி விஜயன் முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் மூத்த கட்சி நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள். இதில் அவர்களுடன் பினராயி விஜயன் புதிய மந்திரிசபை குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

ஏற்கனவே சட்ட மந்திரி பாலன் உள்பட 4 மந்திரிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே புதுமுக எம்.எல்.ஏ.க்களுக்கு வாய்ப்பு அளிக்க முடிவு செய்யப்படுகிறது.

இடதுசாரி கூட்டணியில் ஈடுபட்டுள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பிலும் புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி செறுதலா தொகுதியில் வெற்றி பெற்ற பிரசாத், நடபுரா தொகுதியில் வெற்றி பெற்ற ஈ.கே.விஜயன், அடூர் தொகுதியில் வெற்றி பெற்ற சிட்டயம் கோபகுமார் உள்ளிட்டோருக்கு மந்திரி சபையில் வாய்ப்பு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒழூர் தொகுதியில் வெற்றி பெற்ற குஞ்சுராணிக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால் புனலூர் தொகுதியில் வெற்றி பெற்ற சுபாலுக்கு வாய்ப்பு கிடைக்கும். கேரள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 பேருக்கும் பதவி வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News