செய்திகள்
சேலம் ராஜகணபதி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஊழியர்கள்

சேலம் ராஜகணபதி கோவிலில் ரூ.24 லட்சம் உண்டியல் காணிக்கை

Published On 2021-09-03 04:50 GMT   |   Update On 2021-09-03 04:50 GMT
சேலம் ராஜகணபதி கோவிலில் உண்டியல் வருமானமாக 23 லட்சத்து 99 ஆயிரத்து 35 ரூபாயும், 6 கிராம் 500 மில்லி தங்கமும், 680 கிராம் வெள்ளியும் இருந்தது.
சேலம் டவுனில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்தநிலையில், கோவிலில் வைக்கப்பட்டு இருந்த 4 உண்டியல்கள் நேற்று திறந்து அதில் இருந்த காணிக்கை பணம் சுகவனேசுவரர் கோவிலில் வைத்து எண்ணப்பட்டன.

இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் உமாதேவி, சுகவனேசுவரர் கோவில் உதவி ஆணையாளர் குமரேசன், ஆய்வாளர் மணிமாலா மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் தன்னார்வலர்கள், கோவில் பணியாளர்கள், பெண்கள் ஆகியோர் பணம், காசு ஆகியவற்றை தனித்தனியாக எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

அந்த 4 உண்டியல்களிலும் 23 லட்சத்து 99 ஆயிரத்து 35 ரூபாயும், 6 கிராம் 500 மில்லி தங்கமும், 680 கிராம் வெள்ளியும் இருந்தது. இதுதவிர, கத்தார் நாட்டை சேர்ந்த ரியால் நோட்டும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதம் 9-ந் தேதி உண்டியல்கள் திறக்கப்பட்டபோது ரூ.10 லட்சம் வசூலாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News