உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வேலூரில் 103 டிகிரி வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் தவிப்பு

Published On 2022-04-16 10:28 GMT   |   Update On 2022-04-16 10:28 GMT
வேலூரில் 103 டிகிரி வெயிலால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
வேலூர்:

வேலூர் மாவட்டத்தில் வெயில் கொளுத்தத் தொடங்கி விட்டது. சில வாரங்களாக வெயில் சதம் அடிப்பதும், பிறகு சற்று குறைவதுமாக போக்கு காட்டிக் கொண்டிருக் கிறது. பகல் நேரத்தில் வெளியில் தலைகாட்டவே முடியாத அளவுக்கு வெப்ப காற்று வீசுகிறது.

நேற்று வழக்கத்துக்கு மாறாக வெயில் கொளுத்தியது. இதனால் வெப்பத்தின் அளவு அதிகரித்து அனல்காற்று வீசியது. சாலைகளில் கானல் நீர் தெரிந்தது. வெயிலுக்கு பயந்து மக்கள் குடை பிடித்தபடி வெளியில்  சென்றனர்.

வெப்பக்காற்று வீசிய தால் வாகனங்களில் சென்றவர்கள் முகத்தை துணியால் சுற்றி சென்று வந்தனர். கடுமையான வெப்பம் தாங்க முடியாமல் வியர்வை மழையில் நனைந்தபடியே நடையைக் கட்டினர். 

நேற்று அதிகபட்சமாக வேலூரில் 103.1 டிகிரி வெப்பம் பதிவாகியிருந்த்து. வேலூரில் வெயில் கொளுத்தினாலும், பக்கத்து மாவட்டமான திருப்பத்தூரில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

வேலூரில் கோடை வெயில் தாக்கத்தை தணிக்க மழை பெய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வருண பகவானை வேண்டி உள்ளனர்.
Tags:    

Similar News