உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

உடுமலையில் மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் - இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி முதல்வருக்கு மனு

Published On 2022-05-06 08:01 GMT   |   Update On 2022-05-06 08:01 GMT
உடுமலை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியான யூனியன் ஆபீஸ் அருகில் மெயின்ரோட்டில் மதுபான கடை இருந்து வந்தது.
மடத்துக்குளம்:

இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் மூர்த்தி, தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியான யூனியன் ஆபீஸ் அருகில் மெயின்ரோட்டில் மதுபான கடை இருந்து வந்தது

அந்த கடை அருகில் யூனியன் அலுவலகம், இ.எஸ்.ஐ., மருத்துவமனை, வணிக வளாகங்கள், கோவில்கள், பஸ் நிலையம் உள்ள நிலையில், சுற்றுலா தலங்களான திருமூர்த்திமலை, அமராவதி அணை, திருப்பதி கோவில் மற்றும் வழிபாட்டு ஸ்தலங்கள், மற்றும் ஆர்.டி.ஓ. அலுவலகம், கலைக்கல்லூரி ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் அதிகமாக செல்லும் பகுதியாகவும் இருந்தது. 

இதனால்அதிக அளவில் விபத்துகள் ஏற்பட்ட காரணத்தினாலும் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த காரணத்தினாலும பெண்கள் நடமாட முடியாத சூழ்நிலை உருவானதாலும், ஏற்கனவே அந்த இடத்தில் இயங்கி வந்த மதுபான கடையை அரசு அப்புறப்படுத்தி உள்ளது.

ஆனால் மீண்டும் இதே இடத்தில் மதுபானக்கடையை திறப்பதற்கு  ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். எனவே தாங்கள் மக்கள் நலன் கருதியும்  விபத்துக்களை தடுப்பதற்கும், பொதுமக்கள் அச்சம் இல்லாமல் செல்வதற்கு தாங்கள் உடனடியாக தலையிட்டு மீண்டும் அதே இடத்தில் கடையை திறக்க  அனுமதிக்காமலும் அந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதற்கு  தாங்கள் ஆவண செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News