செய்திகள்
நிதின் கட்காரி

விரைவுச்சாலையால் ஆண்டுக்கு ரூ.1,500 கோடி சுங்க வருமானம் கிடைக்கும்: நிதின் கட்காரி

Published On 2021-09-20 02:11 GMT   |   Update On 2021-09-20 02:11 GMT
அடுத்த 5 ஆண்டுகளில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் வருடாந்திர சுங்கச்சாவடி வருவாய் ரூ.40 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடியாக உயரும்.

புதுடெல்லி :

டெல்லி-மும்பை இடையே 8 வழி விரைவுச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இப்பணி 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இச்சாலையால் பயண நேரம் 24 மணியில் இருந்து 12 மணியாக குறையும்.

மத்திய தரைவழி போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி, கடந்த சில நாட்களாக சாலையின் ஆய்வுப்பணியை மேற்கொண்டார். நேற்று அவர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

டெல்லி-மும்பை விரைவு சாலையால், சுங்கச்சாவடி வருமானம் ஆண்டுக்கு ரூ.1,000 கோடி முதல் ரூ.1,500 கோடிவரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், வருவாய் ஈட்டுவதில் தங்கச்சுரங்கம் போன்றது. அடுத்த 5 ஆண்டுகளில், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் வருடாந்திர சுங்கச்சாவடி வருவாய் ரூ.40 ஆயிரம் கோடியில் இருந்து ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடியாக உயரும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News