ஆட்டோமொபைல்
மஹிந்திரா தார்

தீவிர சோதனையில் 2020 மஹிந்திரா தார்

Published On 2019-07-23 10:24 GMT   |   Update On 2019-07-23 10:24 GMT
மஹிந்திரா நிறுவனத்தின் 2020 தார் மாடல் தீவிர சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.



2020 மஹிந்திரா தார் ஆட்டோ எக்ஸ்போ 2020 விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், இந்த மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வரிசையில் தற்சமயம் புதிய தார் ஹார்டுடாப் மாடல் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கிறது.

ஸ்பை படங்களில் புதிய 2020 தார் முழுமையாக மறைக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் தோற்றம் முன்பை விட அதிநவீனமாகவும், புதிய மற்றும் பெரிய பாடி ஷெல் கொண்டிருக்கிறது. புதிய அம்சங்கள் வழங்கப்பட்டாலும், பாரம்பரிய ஜீப் தோற்றம் அப்படியே காணப்படுகிறது.

புதிய ஜீப் முன்புறம் மெல்லிய கிரில், புதிய வட்ட வடிவ ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய மஹிந்திரா தார் மூன்றாம் தலைமுறை சேசிஸ் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதே சேசிஸ் டி.யு.வி.300 மற்றும் ஸ்கார்பியோ மாடலிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.



உள்புறம் புதிய டேஷ்போர்டு, பெரிய தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் பெரிய ஸ்டீரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு வசதிகளை பொருத்தவரை ஏ.பி.எஸ்., இ.பி.டி., முன்புறம் டூயல் ஏர்பேக், முன்புறம் சீட் பெல்ட் ரிமைண்டர், ஹை-ஸ்பீட் அலெர்ட் சிஸ்டம், பின்புறம் பார்க்கிங் சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

புதிய 2020 தார் மாடலில் புதிய 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுகிறது. இந்த என்ஜின் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு ஏற்றதாகும். இந்த என்ஜின் அதிகபட்சம் 140 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடலில் 4WD (ஆல்வீல் டிரைவ் சிஸ்டம்) வழங்கப்படுகிறது.

தற்சமயம் மஹிந்திரா தார் மாடல் ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 6.72 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) துவங்கி, டாப் எண்ட் மாடல் விலை ரூ. 9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2020 மஹிந்திரா தார் மாடல் விலை ரூ. 7.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) துவங்கி டாப் எண்ட் மாடல் ரூ. 11.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புகைப்படம் நன்றி: GaadiWaadi
Tags:    

Similar News