செய்திகள்
சீரமைப்பு பணியை ஆய்வு செய்த செல்வராஜ் எம்.எல்.ஏ.,

தெருவில் தேங்கி நின்ற கழிவு நீரில் இறங்கி ஆய்வு செய்த செல்வராஜ் எம்.எல்.ஏ.

Published On 2021-10-18 09:24 GMT   |   Update On 2021-10-18 09:24 GMT
வேட்டியை மடித்துக்கட்டி கழிவுநீர் தேங்கிய வீதியில் நடந்து சென்று எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
திருப்பூர்:

திருப்பூர் ஊத்துக்குளிரோடு மண்ணரை தேவேந்திர வீதியில் மழைநீர் ரோட்டில் தேங்கியதால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். கழிவுநீர் செல்வதற்கு போதுமான வடிகால் வசதி இல்லாததால் வீதியில் நடமாட முடியாமல் சிரமம் அடைந்தனர். 

இந்தநிலையில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க அப்பகுதிக்கு திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் சென்றார். அப்பகுதியை சேர்ந்தவர்கள் எம்.எல்.ஏ.விடம் முறையிடவே, உடனடியாக அந்தபகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

வேட்டியை மடித்துக்கட்டி கழிவுநீர் தேங்கிய வீதியில் நடந்து சென்று ஆய்வு செய்தார். பின்னர் மாநகராட்சி ஊழியர்கள் அங்கு வந்து வீதியில் தேங்கிய மழை நீரைஅகற்றினார்கள். 

மேலும் சகதியாக காட்சியளித்த வீதியில் மண்கொட்டி சீரமைத்தனர். உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட எம்.எல்.ஏ.வுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். 

அப்போது திருப்பூர் தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராஜன், வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார், இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர்.ராஜ், நிர்வாகி திலகராஜ் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News