ஆன்மிகம்
பருவதமலை

மார்கழி மாத பிறப்பையொட்டி பருவதமலையில் திருவிழாக்கள், கிரிவலம், மலை மீது ஏற தடை

Published On 2020-12-14 03:32 GMT   |   Update On 2020-12-14 03:32 GMT
தற்போது கொரோனா தொற்று பரவலால் கோவில்களில் நடக்கயிருந்த திருவிழாக்கள், பருவதமலை மீது பக்தர்கள் ஏற, மலையைச் சுற்றி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கலசபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தென்மாதிமங்கலத்தில் 4,560 அடி உயரம் கொண்ட பருவதமலை உள்ளது. இந்த மலை மீது மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில் உள்ளது. அதேபோல் மலை அடிவாரத்தில் கோவில்மாதிமங்கலம் கிராமத்தில் கரைகண்டேசுவரர் கோவில் உள்ளது. இந்தக் கோவில்களில் ஆண்டு தோறும் மார்கழி மாதப்பிறப்பு அன்று திருவிழா நடப்பது வழக்கம். அத்துடன் பருவதமலையைச் சுற்றி 24 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் கிரிவலம் செல்வதும், மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதும் வழக்கம். அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

இந்தநிலையில் 16-ந்தேதி மார்கழி மாதம் பிறக்கிறது. தற்போது கொரோனா தொற்று பரவலால் கோவில்களில் நடக்கயிருந்த திருவிழாக்கள், பருவதமலை மீது பக்தர்கள் ஏற, மலையைச் சுற்றி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோவிலில் வழக்கமாக பூஜைகள் நடக்கும் எனக் கோவில் செயல் அலுவலர் பரமேஸ்வரி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News