செய்திகள்
கட்டுமான இடத்தை ஆய்வு செய்த யோகி ஆதித்யநாத்

ஆகஸ்ட் 5-ல் அடிக்கல் நாட்டு விழா - ராமர் கோவில் கட்டுமான இடத்தை நேரில் ஆய்வு செய்தார் யோகி ஆதித்யநாத்

Published On 2020-07-25 10:28 GMT   |   Update On 2020-07-25 10:28 GMT
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான இடத்தை உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
லக்னோ:

அயோத்தியில் ராமர்  கோவில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனையடுத்து ராமர் கோவில் கட்டும் முதல் கட்ட பணிகள் தொடங்கின. 

ராமர் சிலை வைக்கப்படும் புதிய இடத்தை தேர்வு செய்து அங்கு மார்ச் மாதம் பூஜை செய்யப்பட்டது. அதன்பின்னர், கட்டுமானப் பணியை தொடங்க ஏதுவாக,ராமர் சிலை கூடாரத்திலிருந்து புதிய இடத்திற்கு மாற்றப்பட்டது.

இதற்கிடையில், அயோத்தியில் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி மதியம் 12.30 மணியளவில் ராமர் கோவில் கட்டுமானப் பணி தொடங்க உள்ளது. 
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணியை தொடங்கி வைக்க உள்ளார். 

பாஜக மற்றும் விஎச்பி அமைப்பின் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கும்படி அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடிக்கல் நாட்டுவிழா என்னும் 10 நாட்களில் தொடங்க உள்ள நிலையில் உத்தரபிரதேச முதல் மந்திரி அயோத்தியில் இன்று ஆய்வு செய்தார். 

ராமர் கோவில் கட்டப்பட உள்ள இடத்தை ஆய்வு செய்த அவர் ராம ஜென்மபூமி அறக்கட்டளை நிர்வாகிகளுடனும் அடிக்கல் நாட்டு பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

Tags:    

Similar News