செய்திகள்
கோப்புபடம்

மாணவர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்படுமா? - பெற்றோர்கள் எதிர்பார்ப்பு

Published On 2021-09-13 06:55 GMT   |   Update On 2021-09-13 06:55 GMT
9 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடக்கிறது. ஒரு வகுப்பில் 20 மாணவர்களே அனுமதிக்கப்படுகின்றனர்.
திருப்பூர்;

கடந்த ஜனவரி மாதம் முதல் அலை முடிவில் பள்ளிகள் திறக்கப்பட்டபோது மாணவர்களுக்கு ஜிங்க் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டன. 

நாளொன்றுக்கு இரண்டு வீதம் பள்ளியிலேயே மாணவர்கள் சாப்பிட வழங்கப்பட்டது. ஏப்ரல் மாத இறுதியில் இரண்டாம் அலை தொடங்கியதும் பள்ளிகள் மூடப்பட்டன. மீண்டும் பள்ளிகள் செப்டம்பர் 1-ந்தேதி முதல் இயங்குகின்றன. 

9 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடக்கிறது. ஒரு வகுப்பில் 20 மாணவர்களே அனுமதிக்கப்படுகின்றனர். 

காய்ச்சல் உள்ள மாணவர்களை பள்ளிக்குள் நுழைய அனுமதிக்க வேண்டாம். மாணவர்களின் உடல் வெப்ப நிலையை தினமும் பரிசோதிக்க வேண்டும். 

மாணவர்களுக்கு மனநல ஆலோசனை தர வேண்டும். அதன் பின்னரே பாடம் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சத்து மாத்திரைகள் நிறுத்தப்பட்டுள்ளன. 

அக்டோபர் மாதம் 3-வது அலை உச்சம் தொடும் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் தொற்று குறைந்து வந்தாலும் பள்ளி திறப்புக்கு பின் ஆசிரியர், மாணவர்களுக்கு கடந்த சில தினங்களாக தொற்று உறுதியாகி வருகிறது. 

எனவே கடந்த முறை வழங்கப்பட்ட சத்து மாத்திரைகள் சுகாதாரத்துறை மூலம் இம்முறையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பெற்றோரிடையே எழுந்துள்ளது.
Tags:    

Similar News