ஆன்மிகம்
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்த படம்.

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்

Published On 2021-04-10 05:15 GMT   |   Update On 2021-04-10 05:15 GMT
சித்திரை திருவிழாவை முன்னிட்டு திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு முககவசம் அணிந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி அம்மன் - அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 14 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. விநாயகர், சந்திரசேகரர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருளினர். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றம் நடைபெற்றது.

விழாவில் கோவில் நிர்வாகத்தினர் கொரோனா முன்னெச்சரிக்கையோடு கோவில் குருக்கள் மற்றும் திரளான பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு முககவசம் அணிந்து கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் தொடர்ந்து விழா நாட்களில் ஒவ்வொரு வாகனத்திலும் சாமி புறப்பாடு கோவில் வலகத்திற்குள் நடைபெறும். வருகிற 19-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், கோவில் குருக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News