ஆன்மிகம்
கங்கையம்மன்

சித்தூர் நடுத்தெரு கங்கையம்மன் திருவிழாவை நடத்த தடை

Published On 2021-04-16 08:10 GMT   |   Update On 2021-04-16 08:10 GMT
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் சித்தூர் நடுத்தெரு கங்கையம்மன் திருவிழா நடப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு மே மாதம் கொரோனா தொற்று பரவலால் நடுத்தெரு கங்கையம்மன் திருவிழா நடத்த போலீஸ் துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சித்தூரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுதாகர்ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் சித்தூர் நடுத்தெரு கங்கையம்மன் திருவிழா நடப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு மே மாதம் கொரோனா தொற்று பரவலால் நடுத்தெரு கங்கையம்மன் திருவிழா நடத்த போலீஸ் துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நடுத்தெரு கங்கையம்மன் திருவிழா கமிட்டி நிர்வாகிகளுடன் போலீசார் ஆலோசனை நடத்தினர். அதில் பொதுமக்கள், பக்தர்களின் நலன் கருதி கங்கையம்மன் திருவிழாவை நடத்த வேண்டாம் எனத் தீர்மானிக்கப்பட்டது. அதற்கு தர்மகர்த்தாவும், கங்கையம்மன் திருவிழா கமிட்டி உறுப்பினர்களும் சம்மதம் தெரிவித்தனர்.

மேலும் பொதுமக்கள், பக்தர்கள் தங்கள் வீட்டிலேயே பொங்கல் வைத்து, கூழ் ஊற்றி கங்கையம்மன் திருவிழாைவ கொண்டாடலாம். காப்புக்கட்டும் நாள் அன்று 5 பேர் மட்டுமே பங்கேற்று கங்கையம்மன் கமிட்டி சார்பாக காப்பு கட்டிக்கொள்ளலாம். திருவிழா அன்று கங்கையம்மனை நடுத்தெருவில் வைத்து தர்மகர்த்தா குடும்பத்தினர், கமிட்டி குடும்பத்தினர் மட்டுமே பூஜை செய்து வழிபடலாம். அதற்கு பொதுமக்களும், பக்தர்களும் போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது சித்தூர்-1 டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரபிரசாத், சித்தூர்-2 டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் யுகாந்தர் உள்பட பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News