உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

அவினாசி பகுதியில் சூறைக்காற்றால் சேதமான வாழைகளுக்கு நஷ்டஈடு - விவசாயிகள் வலியுறுத்தல்

Published On 2022-05-06 06:52 GMT   |   Update On 2022-05-06 06:52 GMT
அவிநாசி வேட்டுவபாளையம் ஊராட்சி, அசநல்லிபாளையம் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 6,000 வாழை மரங்கள் சாய்ந்தன.
அவினாசி:

திருப்பூர் மாவட்டம் சேவூர் பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு பலத்த சூறாவளி காற்று வீசியது. இந்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன.

முறியாண்டம்பாளையம் ஊராட்சி பெரிய காட்டுபாளையம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியை ஒட்டி இருந்த பழமையான மரம், வேரோடு சாய்ந்தது. அந்த மரம் பள்ளி தடுப்புச் சுவரின் மீது விழுந்ததால், தடுப்புச்சுவரை சேதப்படுத்தி பள்ளி வளாகத்திற்குள் விழுந்தது.

அவிநாசி வேட்டுவபாளையம் ஊராட்சி, அசநல்லிபாளையம் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த 6,000 வாழை மரங்கள் சாய்ந்தன. வாழை மரங்கள் காற்றுக்கு சாய்ந்து விடக்கூடாது என்பதற்காக நான்கு புறமும், ‘பெல்ட்’ கட்டியிருந்த போதும் சேதம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். எனவே சேதமடைந்த வாழைகளுக்கு அரசு நஷ்டஈடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News