ஆன்மிகம்
பேரூர் பட்டீசுவரர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

பங்குனி உத்திர தேரோட்டம்: பேரூர் பட்டீசுவரர் கோவிலில் கொடியேற்று விழா

Published On 2021-03-20 08:07 GMT   |   Update On 2021-03-20 08:07 GMT
பங்குனி உத்திர தேரோட்டத்தையொட்டி பேரூர் பட்டீசுவரர் கோவிலில் கொடியேற்று விழா நடைபெற்றது. வருகிற 24-ந் தேதி மாலை திருக்கல்யாணம் நடக்கிறது.
கோவையை அடுத்த பேரூர் பட்டீசுவரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர தேர்த்திருவிழா 10 நாட்கள் உற்சாகமாக நடைபெறும். இந்தாண்டு, பங்குனி உத்திர தேர்த்திருவிழா, நேற்று காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, மாலையில் யாகசாலை பூஜை, மலர் பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற்றது.

27-ந் தேதி வரை 8 நாட்களுக்கு காலையில் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும், யாகசாலை பூஜை நடக்கிறது. வருகிற 24-ந் தேதி மாலை திருக்கல்யாணம் நடக்கிறது.

25-ந் தேதி மாலை பஞ்சமூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளல், மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.

27-ந் தேதி இரவு தெப்பத் திருவிழா நடக்கிறது. 28-ந் தேதி, அதிகாலை நடராஜருக்கு மகா அபிஷேகம், காலை 7 மணிக்கு மேல், பங்குனி உத்திர தரிசன காட்சி, திருவீதி உலா ஆகியவை நடக்கிறது. இரவு 8 மணிக்கு கொடியிறக்குதலுடன் விழா முடிகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News