செய்திகள்
வாக்காளர் பட்டியல் தொடர்பாக கலெக்டர் ஆய்வு

வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை கலெக்டர் ஆய்வு

Published On 2021-01-08 02:59 GMT   |   Update On 2021-01-08 02:59 GMT
வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை கலெக்டர் அரவிந்த் நேற்று ஆய்வு செய்தார்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாட்டர் டேங்க் ரோடு, பைப்புவிளை, செல்லங்கன் தெரு, கிருஷ்ணன்கோவில் மற்றும் அம்பேத்கர்காலனி போன்ற பகுதிகளிலும், தோவாளை தாலுகா கீழத்தெரு பகுதியிலும் வக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்துதல், முகவரி மாற்றம், அடையாள அட்டை சரி பார்த்தல் போன்ற பணிகள் நடந்தது. இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, ராஜாக்கமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்த ஆலோனை கூட்டத்தில் கலந்து கொண்டு யூனியனுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் ஜல்ஜீவன் மிஷன் திட்டம், பசுமைவீடுதிட்டம், மகாத்மாகாந்தி தேசிய ஊரகவேலைவாய்ப்பு உறுதித்திட்டம் உள்பட பல்வேறு திட்டப்பணிகள் குறித்து பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில், செயற்பொறியாளர் (ஊரகவளர்ச்சி) ஏழிசைச் செல்வி, ராஜாக்கமங்கலம் யூனியன் தலைவர் அய்யப்பன், தாசில்தார்கள் சுசீலா (அகஸ்தீஸ்வரம்), ஜீலியன் ஜீவர் (தோவாளை), தேர்தல் துணை தாசில்தார்கள், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News