செய்திகள்
சென்னை ஐகோர்ட்

சென்னை, மதுரை ஐகோர்ட்டு 14-ந்தேதி முதல் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கும்

Published On 2021-06-11 03:06 GMT   |   Update On 2021-06-11 03:06 GMT
சென்னை ஐகோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டு கிளையின் அனைத்து பிரிவுகளும் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும் என்று ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் ப.தனபால் அறிவித்துள்ளார்.
சென்னை:

கொரோனா பரவல் காரணமாக சென்னை ஐகோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டு கிளையில் காணொலி காட்சி மூலம் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. நீதிபதிகள் மட்டும் நீதிமன்றங்களுக்கு நேரில் வந்து வழக்குகளை விசாரிக்கின்றனர். அரசு வக்கீல்கள் சிலர் வழக்குகளில் நேரில் ஆஜராகி வருகின்றனர்.

இந்தநிலையில் வருகிற 14-ந் தேதி முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சென்னை ஐகோர்ட்டு, மதுரை ஐகோர்ட்டு கிளையின் அனைத்து பிரிவுகளும் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும் என்று ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் ப.தனபால் அறிவித்துள்ளார்.

மேலும் அந்த அறிவிப்பில், “50 சதவீத பணியாளர்களை இரு பிரிவுகளாக பிரித்து, ஒவ்வொரு பிரிவினருக்கும் 2 நாட்கள் பணி என சுழற்சி முறையில் பணி ஒதுக்க வேண்டும். மீதமுள்ள 50 சதவீத பணியாளர்கள் தேவைக்கேற்ப அழைக்கும் பட்சத்தில் பணிக்கு வரும் வகையில் தயாராக இருக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News