ஆன்மிகம்
வள்ளலார்

நாகர்கோவிலில் வள்ளலார் அவதார தினவிழா நாளை நடக்கிறது

Published On 2021-10-04 08:45 GMT   |   Update On 2021-10-04 08:45 GMT
வள்ளலாரின் 199-வது அவதார தின விழா நாளை 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நாகர்கோவில், வடசேரி, ரவிவர்மன்புதுத்தெருவில் உள்ள வள்ளலார் பேரவையில் நடக்கிறது.
வள்ளலாரின் 199-வது அவதார தின விழா மற்றும் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நாளை 5-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு நாகர்கோவில், வடசேரி, ரவிவர்மன்புதுத்தெருவில் உள்ள வள்ளலார் பேரவையில் நடக்கிறது.

விழாவில் குமரி மாவட்ட வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா தலைமை தாங்குகிறார். நிகழ்ச்சியை நாகர்கோவில், ஆயத்தீர்வை உசூர் மேலாளர் கோலப்பன் தொடங்கி வைக்கிறார். வள்ளலார் பேரவை பொது செயலாளர் மகேஷ் வரவேற்று பேசுகிறார். நிகழ்ச்சியில், ரவிவர்மன்புதுத்தெரு ஊர் தலைவர் சுப்பிரமணியம், பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ராஜன் உள்பட பலர் முன்னிலை வகிக்கிறார்கள்.

வள்ளலார் உருவப்படத்தை கன்னியாகுமரி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் திறந்து வைக்கிறார். பொன்ஜெஸ்லி கல்வி குழும தலைவர் பொன்.ராபர்ட் சிங் அருட்ஜோதி ஏற்றி வைக்கிறார். நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு நவீன்குமார், தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு கணேசன் ஆகியோர் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்கள். முடிவில் நாகர்கோவில் குடும்பநல ஆலோசனை மைய ஆலோசகர் தினேஷ் கிருஷ்ணன் நன்றி கூறுகிறார். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் குமரி மாவட்ட வள்ளலார் பேரவையினர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News