செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

6 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகம்- மத்திய அரசு தகவல்

Published On 2021-03-17 07:23 GMT   |   Update On 2021-03-17 07:23 GMT
தமிழகம், கர்நாடகா, கேரளா, குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் ஒரே நாளில் கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்பில் தமிழகம், கர்நாடகா, கேரளா,குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய 6 மாநிலங்களில் 84% பாதிப்பு உள்ளது.

ஒரே நாளில் கொரோனாவால் இறந்தவர்களில் 87% பேர் 6 மாநிலங்களை சேர்ந்தவர்கள் எனவும், 15 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 28,903 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News