செய்திகள்
ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர்

எல்லோருக்கும் இந்த நிலை ஏற்படும்: ஸ்டீவ் ஸ்மித்திற்கு டேவிட் வார்னர் ஆதரவு

Published On 2021-01-03 10:48 GMT   |   Update On 2021-01-03 10:48 GMT
இந்தியாவிற்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டீஸ் ஸ்மித்திற்கு டேவிட் வார்னர் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் ஸ்டீவ் ஸ்மித் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தார்.

அடிலெய்டு டெஸ்டில் 1, 1* ரன்களும், மெல்போர்ன் டெஸ்டில் 0, 8 ரன்களும் அடித்தார். ஸ்டீவ் ஸ்மித் ஃபார் இழந்திருப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய பாதகமாக இருக்கிறது.

சிட்னி டெஸ்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் எல்லோருக்கும் இதேமாதிரியான நிலை ஏற்படும் என்று என்று டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து டேவிட் வார்னர் கூறுகையில் ‘‘ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருந்த ஸ்டீவ் ஸ்மித்தை, கேன் வில்லியம்சன் பின்னுக்குத்தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார். ஆனால், நீங்கள் அவருடைய சராசரியை பார்த்தீர்கள் என்றால், ஸ்டீவ் ஸ்மித் 60-க்கு மேல் வைத்துள்ளார்.

ஒவ்வொருவருக்கும் லேசான ஃபார்ம் இழப்பு ஏற்படும். எனக்குக்கூட 2019 ஆஷஸ் தொடரில் இதே நிலை ஏற்பட்டது. குறிப்பிட்ட அந்த பந்தில் அவுட்டாக்குவதாக இருந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது. அதற்கான பேட்டிங் பயிற்சி எடுக்கவில்லை என்று சொல்ல முடியாது. வலைப்பயிற்சியில் இதுபோன்று அவுட்டானது கிடையாது. போட்டி இல்லாத நேரத்திலும் ஸ்மித் பயிற்சி மேற்கொண்டுதான் வருகிறார்.’’ என்றார்.
Tags:    

Similar News