செய்திகள்
கோப்புப்படம்

இந்தியாவில் இருந்து கடல்உணவை இறக்குமதி செய்ய சீனா ஒருவாரம் தடை

Published On 2021-06-11 12:46 GMT   |   Update On 2021-06-11 12:46 GMT
உறைந்த கடல்உணவு பாக்கெட்டில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால், 6 நிறுவன தயாரிப்புகளை இறக்குமதி செய்ய சீனா தடைவிதித்துள்ளது.
சீனாவில் முதன்முதலாக கொரேனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அதன்பின் உலக நாடுகளுக்கு பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக திகழந்து வருகிறது.

சீனா  கடந்த வருடத்தில் இருந்து வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் உறைந்த கடல்உணவுகளை பரிசோதனை செய்து, கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னர்தான், நாட்டில் விற்பனைக்கு அனுமதி அளிக்கிறது.

இந்தியாவைச் சேர்ந்த ஆறு கடல்உணவு தயாரிப்பு நிறுவனங்கள் உறைந்த கடல்உணவை சீனாவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த நிறுவனங்களின் பாக்கெட்டுகளை சுங்கஅதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது பாக்கெட்டில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பபட்டது. இதனால் ஒருவாரத்திற்கு இந்திய நிறுவனங்களிடம் இருந்து கடல்உணவை இறக்குதி செய்ய தடைவிதித்துள்ளது.

இந்த அறிவிப்பு நேற்று வெளியாகியுள்ளது.
Tags:    

Similar News