செய்திகள்
தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்துடன் ஓபிஎஸ், ஜி.கே.வாசன்

6 தொகுதிகளில் போட்டி- தமாகா வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Published On 2021-03-12 10:49 GMT   |   Update On 2021-03-12 10:49 GMT
தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தமாகா வேட்பாளர்களை கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று அறிவித்தார்.
சென்னை:

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு பட்டுக்கோட்டை, திருவிக நகர், ஈரோடு கிழக்கு, லால்குடி, தூத்துக்குடி, கிள்ளியூர் தொகுதிகள் ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் இன்று அறிவித்துள்ளார். வேட்பாளர்கள் விவரம் வருமாறு:

திரு.வி.க.நகர் - பி.எல்.கல்யாணி
லால்குடி- தர்மராஜ்
பட்டுக்கோட்டை - ரங்கராஜன்
தூத்துக்குடி- விஜயசீலன்
கிள்ளியூர் - ஜூட் தேவ்
ஈரோடு கிழக்கு- யுவராஜா.

தமாகாவின் சைக்கிள் சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், 6 தொகுதிகளிலும் தமாகா வேட்பாளர்கள் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார்கள் என ஜி.கே.வாசன் கூறி உள்ளார்.
Tags:    

Similar News