தொழில்நுட்பம்
வாட்ஸ்அப்

இது சரிப்பட்டு வராது - பிரைவசி பாலிசி விவகாரத்தில் வாட்ஸ்அப் செயலிக்கு மத்திய அரசு எச்சரிக்கை

Published On 2021-05-21 04:21 GMT   |   Update On 2021-05-21 05:05 GMT
வாட்ஸ்அப் செயலியில் அறிவிக்கப்பட்ட புது பிரைவசி பாலிசி குறித்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அந்நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.


வாட்ஸ்அப் செயலியின் புது பிரைவசி பாலிசி சர்ச்சை தொடர்கதையாக இருக்கிறது. புதிய பிரைவசி பாலிசி திட்டத்தை கைவிட வலியுறுத்தி வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

புதிய பிரைவசி பாலிசி மற்றும் அதனை அறிமுகப்படுத்தும் வழிமுறைகள் தகவல் தனியுரிமை, டேட்டா பாதுகாப்பு, பயனர் விருப்பம் உள்ளிட்ட மதிப்புகளை குறைக்கிறது. மேலும் இது இந்திய குடிமக்களின் உரிமை மற்றும் விருப்பங்களை பாதிக்கிறது என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.



மத்திய அமைச்சகத்தின் கடிதத்திற்கு பதில் அளிக்க வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு ஏழு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது. திருப்திகரமான பதில் கிடைக்காத பட்சத்தில் சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு மத்திய அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

வாட்ஸ்அப் அறிவித்து இருக்கும் புது பிரைவசி பாலிசி மாற்றங்கள் ஏற்கனவே அமலில் இருக்கும் பல்வேறு இந்திய சட்ட விதிகளை மீறும் வகையில் இருக்கிறது என மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News