செய்திகள்
விநாயகர் சிலைகள்

விநாயகர் சதுர்த்தி: பொது இடங்களில் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை- தமிழக அரசு

Published On 2020-08-13 07:24 GMT   |   Update On 2020-08-13 07:28 GMT
விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க, ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க அனுமதி இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் வரும் 22ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவதையொட்டி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

* தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும்.

* விநாயகர் சதுர்த்தியையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி இல்லை

* பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க, ஊர்வலமாக எடுத்து சென்று கரைக்க அனுமதி இல்லை

* அரசு வெளியிட்ட வழிகாட்டுதலுடன் சிறிய கோவில்களில் விநாயகர் சதுர்த்தியன்று வழிபாடு செய்ய அனுமதி

கொரோனா பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் முன்னெச்சரிக்கையாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கவும், மக்கள் நலன் கருதியும் கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News