விளையாட்டு
புள்ளிகள் எடுக்கும் முயற்சியில் ஜெய்ப்பூர் அணி

புரோ கபடி லீக் - அரியானா, ஜெய்ப்பூர் அணிகள் வெற்றி

Published On 2022-01-07 18:58 GMT   |   Update On 2022-01-07 18:58 GMT
புரோ கபடி லீக் போட்டியின் புள்ளிப் பட்டியலில் தபாங் டெல்லி அணி 4 வெற்றி, 2 டையுடன் 26 புள்ளிகள் எடுத்து 2-ம் இடத்தில் நீடிக்கிறது.
பெங்களூரு:

12 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது.

இதில் நேற்றிரவு நடந்த முதல் போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடிய அரியானா அணி 41-37 என்ற புள்ளிக்கணக்கில் போராடி வெற்றி பெற்றது.

இதன்மூலம் அரியானா அணி 3 வெற்றி, 3 தோல்வி, 1 டை என 20 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளது.

நேற்றிரவு நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பால்டன் அணிகள் மோதின. 

இதில் சிறப்பாக விளையாடிய ஜெய்ப்பூர் அணி 31 - 26 என்ற புள்ளிக் கணக்கில வெற்றி பெற்றது. இது ஜெய்ப்பூர் அணி பெறும் 3வது வெற்றி ஆகும். 
Tags:    

Similar News