ஆன்மிகம்
பாலமலை ரங்கநாதர் கோவில்

கொரோனா பரவல் எதிரொலி: பாலமலை ரங்கநாதர் கோவில் தேரோட்டம் ரத்து

Published On 2021-04-17 08:38 GMT   |   Update On 2021-04-17 08:38 GMT
கொரோனா தொற்று காரணமாக பாலமலை ரங்கநாதர் கோவில் தேரோட்டம் இந்த ஆண்டு ரத்து செய்யப்படுகிறது. அர்ச்சகர்கள் மட்டும் கோவில் அளவில் சிறப்பு பூஜைகள் நடத்துவர்.
கொங்கு மண்டலத்தில் உள்ள பிரபலமான வைணவ திருந்தலங்களில் பாலமலையில் உள்ள ஶ்ரீ ரங்கநாதர் கோவிலும் ஒன்று. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி தேர்த்திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.

இதில் கேரளா, கர்நாடகா மாநிலம் மற்றும் கோவை, நீலகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக கோவில் திருவிழாக்கள் நடத்த தமிழக அரசு தடைவிதித்துள்ளது.

இதையொட்டி பாலமலை ரங்கநாதர் கோவில் தேரோட்டம் இந்த ஆண்டு ரத்து செய்யப்படுகிறது. அர்ச்சகர்கள் மட்டும் கோவில் அளவில் சிறப்பு பூஜைகள் நடத்துவர். இதில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை என்று கோவில் பரம்பரை அறங்காவலர் ஜெகதீசன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News