செய்திகள்
அமைச்சர் சேகர்பாபு

கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை- அமைச்சர் சேகர்பாபு

Published On 2021-07-10 01:48 GMT   |   Update On 2021-07-10 01:48 GMT
தி.மு.க. அரசு பொறுப்பேற்று 60 நாட்களில் இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு சீர்திருத்தம் நடைபெற்றுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை:

கோவில்களின் மேம்பாடு மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்த இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் சீராய்வு கூட்டம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கினார்.

இதையடுத்து சேகர்பாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தி.மு.க. அரசு பொறுப்பேற்று 60 நாட்களில் இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு சீர்திருத்தம் நடைபெற்றுள்ளது. இந்த துறையில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான புகார்கள் அதிகம் உள்ளது. ஆகவே இனிவரும் மாதங்களில் ஒவ்வொரு இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர்கள் குறைந்தபட்சம் 2 ஆக்கிரமிப்புகளையாவது அகற்றி கோவில் சொத்துகளை மீட்கவேண்டும்.

அதேபோல் கோவில்களுக்கு சொந்தமான இடங்களில் செயல்படும் வணிக நிறுவனங்கள் அதிக வாடகை பாக்கி உள்ளவற்றை பாரபட்சம் இல்லாமல் வசூல் செய்யவேண்டும். நில ஆக்கிரமிப்பை அதிக அளவு மீட்கும் அலுவலர்களுக்கும், வாடகை பாக்கி அதிகம் வசூலிக்கும் அலுவலர்களுக்கும் முதல்-அமைச்சர் மூலம் பாராட்டு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Tags:    

Similar News