ஆன்மிகம்
திருப்பாவை

மார்கழி ஸ்பெஷல் தினமும் ஒரு திருப்பாவை பாடுவோம்: இன்று பாடல் - 9

Published On 2020-12-24 01:25 GMT   |   Update On 2020-12-24 01:25 GMT
தூமணி மாடத்துச் சுற்றம் விளக்கெரியத் எனத்தொடங்கும் திருப்பாவை பாடலையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளலாம்.
தூமணி மாடத்துச் சுற்றம் விளக்கெரியத்
தூபங் கமழத் துயிலணைமேற் கண்வளரும்
 மாமான் மகளே! மணிக்கதவத் தாள்திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள்தான்
ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

தூய ஒளிபொருந்திய மாணிக்கங்களால் இழைக்கப்பட்ட மாடம், அதனை சுற்றிலும் ஒளி விளக்குகள் எரிகின்றன. மணம் வீசும் புகை கமழ்கிறது. அங்கே படுக்கையில் உறங்கிக்கொண்டு இருக்கிற மாமன் மகளே, வீட்டின் வாசல் கதவைத் திறப்பாயாக! மாமியாரே, உன் மகள் ஊமையோ? செவிடோ, சோம்பல் கொண்டு உறங்குகிறாளா? அவளை எழுப்ப மாட்டீர்களா? நாராயணனைப்பாடுவதால் மயக்கம் கொண்டு தூங்குகிறாளா? அவளை எழுப்பி விட்டால், அவளோடு சேர்ந்து பல நாமங்கள் கூறி, பரந்தாமனை வழிபடுவோம்.
Tags:    

Similar News