செய்திகள்
தற்கொலை

கேரள ஆளுநர் மாளிகை ஓட்டுனர் குடியிருப்பில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை

Published On 2021-11-21 08:38 GMT   |   Update On 2021-11-21 08:38 GMT
ஆளுநர் மாளிகை ஓட்டுனர் குடியிருப்பில், வாட்ஸ்-அப்பில் தற்கொலை செய்து கொள்வதாக செய்தி வெளியிட்டு டிரைவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.
திருவனந்தபுரம்:

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலா பகுதியை சேர்ந்தவர் தேஜஸ் (48). கேரள ஆளுநர் செல்லும் காருடன் செல்லும் பாதுகாப்பு வாகன ஓட்டுனராக பணிப்புரிந்த இவர், கேரள ராஜ்பவன் வளாகத்திற்கு அருகே உள்ள ஓட்டுனர் குடியிருப்பில் தங்கி வந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் தனது அறையில் தேஜஸ் தூக்குப் போட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

தேஜஸ் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் தான் தற்கொலை செய்துக் கொள்ளப் போவதாக தெரிவித்துவிட்டு தூக்கில் தொங்கி உள்ளார். இதுகுறித்து நடத்திய முதற்கட்ட விசாரணையில் தேஜஸ் தனது சொந்த பிரச்சினையால் இந்த விபரீத முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தேஜஸின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விசாரணை நடவடிக்கைகளுக்கு பிறகு, சடலத்தை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்.. பேஸ்புக் காதலன் மீது ஆசிட் வீசிய இளம்பெண் கைது
Tags:    

Similar News